Wednesday, 22 April 2015

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯 அப்பா இங்க வந்து பாருங்களேன்... அம்மா வச்ச குழம்பக் குடிச்சிட்டு மீனெல்லாம் செத்துக் கிடக்குது சட்டிக்குள்ள!! 🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯 யாருக்காவது குழிதோண்டவும் மண்ணள்ளிப் போடவும் விரும்பினால் அதை விதைகளுக்குச் செய்யுங்கள்.... 🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯 பிய்த்து எடுத்தாலும் பீரோவை விட்டு வர மறுக்கும் சக்திமான் ஸ்டிக்கரில் ஒட்டியிருக்கிறது என் பால்யம்... 🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯 உச்சிக்குப் போய்விட்டால் எல்லாப் பக்கமும் சரிவுதான்... 🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯 ஆம்பளைங்க பண்ற தண்டச்செலவுல மறக்கமுடியாதது கல்யாணத்துக்கு வாங்குன கோட்டு... எப்பப் பாத்தாலும் எரிச்சலா வேற இருக்கும்.. 🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯 இனி ஒரு விவசாயி இன்னொரு விவசாயிக்கு இப்படி கடிதம் எழுதுவார்... "இங்கு நான் நிலத்துடன் இருக்கிறேன், அங்குநீ நிலத்துடன் இருக்கிறாயா என அறிய ஆவல்" 🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯 நம் புகைப்படத்தைப் பார்த்து "ஆ!... இது யாரு!" என திகைப்பதன் சுருக்கமே ஆதார்.. 🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯 ரெய்னாவுக்கு 28 வயசுதான். கல்யாணம் முடிஞ்சுடுச்சுன்னு அம்மாகிட்ட சொன்னேன். அவன் சம்பளம் எவ்வளவுன்னு டான்னு பதிலுக்குக் கேக்கறாங்க.. 🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯 ஒரு உண்மையில் சமாதானம் ஆகாமல் பல பொய்களால் சமாதானமடைபவள் மனைவி... 🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯 பிளாட்பார டிக்கெட் பத்து ரூபாய்க்கு வாங்கியே பிளாட்பாரத்துக்கு வந்துடுவோம் போல..!! 🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯 பிளாட்பாரத்துல நின்னாதான் கட்டணம் 10 ரூபாயாம். அப்படியே கீழ உக்காந்துட்டா கேட்கமாட்டாங்களாம். பிச்சைக்காரன் சொன்னான்... 🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯 தொட்டாச் சிணுங்கியைத் தொட்டு விளையாடிய குழந்தையின் கரங்கள் இன்று தொடு திரையில் சிக்கிக் கொண்டன... 🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯 ஒரு கிரகத்துக்கு விஸ்வநாதன் ஆனந்த் ன்னு பேர் வச்சிருக்காங்களாம்... எனக்கு எங்கவீட்ல 'கெரகம்' ன்னு பேர் வச்சு ரொம்ப வருஷமாச்சு... 🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯 மழுங்கிப் போன அப்பாவின் கண்ணாடியை அணிந்தபோது பூதாகரமாகத் தெரிந்தது, எங்களுக்காகத் தொலைத்த வாழ்க்கை.!! 🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯 உன் அப்பா ஏழையென்றால் அது உன் விதி. உன் மாமனார் ஏழையென்றால் அது உன் இளிச்சவாய்த்தனம்...

No comments:

Post a Comment